வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

RTI - இவ்வளவு தான்



http://www.tn.gov.in/rti/proactive/guidebook_rtiact.pdf

தகவல் அறியும் சட்டத்தில் விண்ணப்பம்
1. எழுத்து மூலமாக இருக்க வேண்டும்.
2. விண்ணப்பத்தினை பதிவஞ்சல் மூலமாக 
அனுப்புங்கள். நகல், தபால் மூலம் அனுப்பிய 
இரசீது ஒப்புகை அட்டை பாதுகாப்பாக 
வைத்திருங்கள்.
அல்லது நேரில் கொடுத்தால் ஒப்புகை 
வாங்குங்கள்.
3. மாநில அரசு துறைகளுக்கு 
விண்ணப்பத்துடன் 

ரூ10/ - நீதிமன்ற ஒட்டுவில்லை ( COURT FEE 
STAMP -நீதிமன்ற வளாகங்கள் தாசில்தார் 
அலுவலகங்களுக்கு பக்கத்தில் 
பெட்டிக்கடைகளில். முத்திரைத் தாள் 
விற்பனையாளர்களிடம் கிடைக்கின்றது). 
மத்திய அரசுக்கு ரூ10/- க்கு கேட்பு 
வரைவோலையாக செலுத்தப்படவேண்டும். 
ஸ்டேட் பேங்க் கடன் அட்டைகள் மூலமாக 
இணையத்திலும் செலுத்தலாம்.
விண்ணப்பம் பெற்ற நாளிலிருந்து 30 
நாட்களுக்குள் பொதுத் தகவல் அலுவலர் பதில் 
அளிக்கவிட்டால் அல்லது விண்ணப்பம் வேறு 
ஏதாவது காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டால் 
தமிழ்நாட்டினை பொருத்த வரை முதுநிலை 
பொதுத் தகவல் அலுவலரிடம் முதல் 
மேல்முறையீடும் தமிழ்நாடு தகவல் 
ஆணையத்திடம் இரண்டாவது மேல் 
முறையீடும் செய்யப்படவேண்டும். தனி மனித 
சுதந்திரம் மற்றும் உயிருக்கு ஆபத்து உள்ள 
சூழ்நிலைகளில் 48 மணி நேரத்தில் தகவல் தர 
வேண்டும். காவல் துறை ஒரு நப்ரினை கைது 
செய்தால் அந்த நபர் மேல் உள்ள வழக்கு பற்றி 
தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி 48 மணி 
நேரத்திற்குள் தகவல் தர வேண்டும்.
காவல் துறையைப் பொருத்த வரை மாவட்ட 
காவல்துறைக் கண்காணிப்பாளர் அல்லது 
காவல்துறை ஆணையாளர்கள் பொதுத் தகவல் 
அலுவலர்களாக உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் துறையைப் 
பொருத்த வரை மாவட்டஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), பொதுத் தகவல் 
அலுவலராகவும் மாவட்ட வருவாய் அலுவலர் 
முதல் மேல் முறையீட்டு நீதிமன்றமாகவும் 
தமிழ்நாடு தகவல் ஆணையம் இரண்டாவது 
மேல்முறையீட்டு நீதிமன்றமாகவும் இருக்கும்.
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் நீங்கள்
1. ஆவணங்களை பார்வையிடலாம். முதல் ஒரு 
மணி நேரத்திற்கு கட்டணம் கிடையாது
2. ஆவணங்களை நகல் எடுக்கலாம். பக்கதிற்கு 
இரண்டு ரூபாய் அல்லது உண்மையாக ஆகின்ற 
செலவு
3. சான்றிட்ட நகல்கள் வழங்கப்படவேண்டும்.
4. மின்ணனு சேமிப்பு வடிவில் உள்ள 
ஆவணங்களை நீங்கள் அதே வடிவில் நகல் 
பெறலாம். அதாவது சி.டிப் பதிவுகள் 
போன்றவற்றின் நகல்களைப் பெறலாம்.
பொது மக்களுக்கு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் எந்த துறையில் தகவல் கேட்க வேண்டும் 
என்ற குழப்பம் இருக்கின்றது. தமிழ்நாடு மாநில 
அரசு பலதுறைகளின் பொதுத் தகவல் 
அலுவலர்கள் மேல்முறியீட்டு அலுவலர்கள் 
பட்டியலை இணையத்தில் வெளியிட்டுள்ளது. 
மத்திய அரசு அனேகமாக குடிநீர்,சாக்கடை 
தெருவிளக்கு போன்றவை உள்ளாட்சி 
அமைப்புகளின் கீழ் வருகின்றது.
தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி அரசு 
துறைகள் தங்களது அலுவலர்களின் 
அதிகாரங்கள், கடமைகள் துறைகளுக்கு 
ஒதுக்கப்படும் நிதிகள் அதாவது துறை பற்றிய 
அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் 
அறியும் படி தெரிவிக்க வேண்டும் . மக்களிடம் 
இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் 
கோப்புகள் 
அட்டவனைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட 
வேண்டும்.
இந்தக் கடமையை செய்தாலே பாதி 
விண்ணப்பங்கள் குறைந்து விடும்.
தமிழ்நாடு அரசு இணையத்தில் தமிழில் வெளியிட்டுள்ள கையேடு:
மத்திய அரசு இணைய தளத்தில் நீங்கள் தகவல் 
உரிமைச் சட்டப்படி விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் தகவல் உரிமைச் சட்டக் 
கையேடு ஆங்கில பி.டி.எப் கோப்பு வடிவில்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆங்கிலத்தில் 
பி.டி.எப் வடிவில்

திங்கள், 19 ஜனவரி, 2015

RTI Rules&Regulation

RTI க்கான பட முடிவு



RTI & Legal Awareness

தகவல் பெறும் உாிமைச்சட்டத்தின் 5 முறையீடுகள்

I. தகவல் கோரும் விண்ணப்பம் - காலவரையறை 30 நாட்கள்

தகவல் கோரும் விண்ணப்பம் பிாிவு 6 (1) APPLICATION

அனுப்புநா் - உங்கள் முகவாி

பெறுநா் - தகவல் பெற விரும்பும் பொது அதிகார அமைப்பின் முகவாி

(பொது தகவல் அலுவலா்,அலுவலக முகவாி, மாவட்டம்.)

உதாரணம்
பொது தகவல் அலுவலா்,
வட்டாட்சியா் அலுவலகம், துாத்துக்குடி.

II. முதல் மேல்முறையீடு (பிாிவு 19 (1)) FIRST APPEAL - 45 நாட்கள்

எதற்காக முதல் மேல்முறையீடு

பிாிவு 6 (1)-ன் கீழ் ஒருவா் தகவல் கோாிய பிறகு தகவல் 30

நாட்களுக்குள் அளிக்கப்படாத போது விண்ணப்பதாரா் அதே

அலுவலகத்திற்கு முதல் மேல்முறையீட்டை பிாிவு 19 (1)-ன் கீழ்

தாக்கல் செய்ய வேண்டியது.

III. இரண்டாம் மேல்முறையீடு (பிாிவு 19 (3)) SECOND APPEAL

எதற்காக இரண்டாம் மேல்முறையீடு - 90 நாட்கள்

பிாிவு 6 (1)-ன் கீழ் ஒருவா் தகவல் கோாிய பிறகு தகவல் 30

நாட்களுக்குள் அளிக்கப்படாத போது விண்ணப்பதாரா் அதே

அலுவலகத்திற்கு முதல் மேல்முறையீட்டை பிாிவு 19 (1)-ன் கீழ்

தாக்கல் செய்து, முதல் மேல்முறையீட்டு அலுவலா் 45

நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காத போது பிாிவு 19 (3)-ன் கீழ்

இரண்டாம் முறையீட்டை தாக்கல் செய்ய வேண்டியது.

IV. ஆணையத்திற்கு நேரடி புகாா் (பிாிவு 18 (1) ) COMPLAINT

எதற்காக பிாிவு 18 (1)-ன் கீழ் புகாா் ?

பிாிவு 6 (1)-ன் கீழ் ஒருவா் தகவல் கோாிய பிறகு தகவல் 30

நாட்களுக்குள் அளிக்கப்படாத போது விண்ணப்பதாரா்

ஆணையத்திற்கு நேரடியாக பிாிவு 18 (1)-ன் கீழ் புகாா் மனுவை

தாக்கல் செய்ய வேண்டியது.

V. உத்திரவின் மீதான புகாா் (பிாிவு 18 (1)) - 1 வருடம்

COMPLAINT AGAINST ORDER

எதற்காக பிாிவு 18 (1)-ன் கீழ் மீண்டும் மேல்முறையீட்டு புகாா் ?

உத்திரவினை நிறைவேற்றாத அல்லது தகவலை திசைதிருப்பிய

தகவலுக்காக பொதுத்தகவல் அலுவலா் மற்றும் பொது அதிகார

அமைப்பின் மீது ஆணையத்திற்கு நேரடி புகாா் பிாிவு 18 (1) -ன்கீழ்

ஆணையத்தின் உத்திரவிட்டதிலிருந்து மேல்முறையீட்டாளா் /

புகாா்தாரா் 1 வருடத்திற்குள் புகாா் மனுவை தாக்கல் செய்ய

வேண்டும்

RTI actions- காங்கிரஸ் தலைவர் சோனியா

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்காதது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய 6 தேசியக் கட்சிகளும் பொது அமைப்புகள் என்றும் அவை தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் பதிலளிக்க கடமைப்பட்டவை என்றும் மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) அறிவித்திருந்தது.
இந்நிலையில், தகவல் உரிமை ஆர்வலரான ஆர்.கே.ஜெயின், சில விவரங்களைக் கோரி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மனு அனுப்பினார். அதற்கு காங்கிரஸ் பதில் அளிக்கவில்லை.
இந்நிலையில், தனது மனுவுக்கு பதிலளிக்காத காங்கிரஸ் கட்சி மீது மத்திய தகவல் ஆணையத்தில் ஆர்.கே.ஜெயின் புகார் அளித்தார். பின்னர், அந்தப் புகாரின்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க தகவல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு அவர் கோரியிருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்ற உயர் நீதிமன்றம், அவரது புகாரின்பேரில் ஆறு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க தகவல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவல்களைத் தரவேண்டும் என்ற உத்தரவைப் பின்பற்றாதது ஏன்? என்பது குறித்து விளக்கமளிக்குமாறும், தகவல் கோரி கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்காதது ஏன் என்று விளக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.