திங்கள், 19 ஜனவரி, 2015

RTI Rules&Regulation

RTI க்கான பட முடிவு



RTI & Legal Awareness

தகவல் பெறும் உாிமைச்சட்டத்தின் 5 முறையீடுகள்

I. தகவல் கோரும் விண்ணப்பம் - காலவரையறை 30 நாட்கள்

தகவல் கோரும் விண்ணப்பம் பிாிவு 6 (1) APPLICATION

அனுப்புநா் - உங்கள் முகவாி

பெறுநா் - தகவல் பெற விரும்பும் பொது அதிகார அமைப்பின் முகவாி

(பொது தகவல் அலுவலா்,அலுவலக முகவாி, மாவட்டம்.)

உதாரணம்
பொது தகவல் அலுவலா்,
வட்டாட்சியா் அலுவலகம், துாத்துக்குடி.

II. முதல் மேல்முறையீடு (பிாிவு 19 (1)) FIRST APPEAL - 45 நாட்கள்

எதற்காக முதல் மேல்முறையீடு

பிாிவு 6 (1)-ன் கீழ் ஒருவா் தகவல் கோாிய பிறகு தகவல் 30

நாட்களுக்குள் அளிக்கப்படாத போது விண்ணப்பதாரா் அதே

அலுவலகத்திற்கு முதல் மேல்முறையீட்டை பிாிவு 19 (1)-ன் கீழ்

தாக்கல் செய்ய வேண்டியது.

III. இரண்டாம் மேல்முறையீடு (பிாிவு 19 (3)) SECOND APPEAL

எதற்காக இரண்டாம் மேல்முறையீடு - 90 நாட்கள்

பிாிவு 6 (1)-ன் கீழ் ஒருவா் தகவல் கோாிய பிறகு தகவல் 30

நாட்களுக்குள் அளிக்கப்படாத போது விண்ணப்பதாரா் அதே

அலுவலகத்திற்கு முதல் மேல்முறையீட்டை பிாிவு 19 (1)-ன் கீழ்

தாக்கல் செய்து, முதல் மேல்முறையீட்டு அலுவலா் 45

நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காத போது பிாிவு 19 (3)-ன் கீழ்

இரண்டாம் முறையீட்டை தாக்கல் செய்ய வேண்டியது.

IV. ஆணையத்திற்கு நேரடி புகாா் (பிாிவு 18 (1) ) COMPLAINT

எதற்காக பிாிவு 18 (1)-ன் கீழ் புகாா் ?

பிாிவு 6 (1)-ன் கீழ் ஒருவா் தகவல் கோாிய பிறகு தகவல் 30

நாட்களுக்குள் அளிக்கப்படாத போது விண்ணப்பதாரா்

ஆணையத்திற்கு நேரடியாக பிாிவு 18 (1)-ன் கீழ் புகாா் மனுவை

தாக்கல் செய்ய வேண்டியது.

V. உத்திரவின் மீதான புகாா் (பிாிவு 18 (1)) - 1 வருடம்

COMPLAINT AGAINST ORDER

எதற்காக பிாிவு 18 (1)-ன் கீழ் மீண்டும் மேல்முறையீட்டு புகாா் ?

உத்திரவினை நிறைவேற்றாத அல்லது தகவலை திசைதிருப்பிய

தகவலுக்காக பொதுத்தகவல் அலுவலா் மற்றும் பொது அதிகார

அமைப்பின் மீது ஆணையத்திற்கு நேரடி புகாா் பிாிவு 18 (1) -ன்கீழ்

ஆணையத்தின் உத்திரவிட்டதிலிருந்து மேல்முறையீட்டாளா் /

புகாா்தாரா் 1 வருடத்திற்குள் புகாா் மனுவை தாக்கல் செய்ய

வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக