திங்கள், 12 ஜனவரி, 2015

Sample RTI - Electricity

எனக்கு சொந்தமான பட்டா நிலத்தில் மின்கம்பம் : இடமாற்றம் செய்யக் கோரிக்கை
20 வருடங்களுக்கு முன்னால் எனக்கு சொந்தமான எனது பட்டா விவசாய நிலத்தில் நான் ஊரில் இல்லாத பொழுது எனது அனுமதி இன்றி மின்கம்பம் ஊன்டபட்டது ,நான் இப்பொழுது அந்த இடத்தை மனை கட்டுவதர்க்காக உபயோகம் செய்து கொள்ள விரும்புகிறேன் ,தற்பொழுது அந்த மின்கம்பம் கீழ்படி படத்தில் கட்டியபடி சேதம் அடைந்த நிலையிலும் விழும் தருவாய் நிலையிலும் உள்ளது ,அதற்காக அந்த மின்கம்பத்தை என்னுடைய இடத்தில் இருந்து என்னுடைய எல்லகைக்கு வெளியே இருக்கும் பொது இடத்தில் மாற்றகோரி மின்சார வாரியத்தை அணுகினேன் அவர்கள் ஒரு மின்கம்பத்தை மாற்ற வேண்டுமெனில் ஒரு மின்கம்பதிர்க்கு இரண்டு லக்சம் வீதம் செலவு ஆகும் அது தவிர இதர செலவுகள் உள்ளன என கூறினார் ,அவ்வளவு பணம் கொடுத்து என்னால் மாற்றம் செய்ய முடியாது, நான் முதல்கட்டமாக என்ன செய்ய வேண்டும்?
இதற்கு RTI HELP DESK  அளித்த ஆலோசனைகள் 

 
தகவல் உரிமைச் சட்டம் 2005இன் பிரிவு 6(1) இன் கீழ் விண்ணப்பம்
(பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் ) நாள் ...................


அனுப்புனர்



பெறுனர்



1, தனியார் நிலத்தில் உரிமையாளரின் முன் அனுமதி இல்லாமல் அவருக்கு உரிய நட்ட ஈடு கொடுக்காமல் மின்சார கடத்தி கம்பங்களை நடலாம் என்று தங்களுக்கு வழிகாட்டும் அரசு ஆணையின் ஒளி நகல் தரவும் .


2. மேற்படி கம்பங்களை நீக்கவேண்டும் என்று மனுதாரர் புகார் செய்யும் பட்சத்தில் அக்கம்பங்களை அவ்விடத்திலிருந்து அகற்றவோ அல்லது அங்கேயே தொடர்ந்து எதிர்ப்பையும் மீறி இருக்க வைக்கவோ உங்களுக்கு அதிகாரம் கொடுக்கும் அரசு ஆணையின் ஒளி நகல் தருக

. 3. மேற்படி இடத்தில் மின் கம்பங்களை நடலாம் என்ற தீர்மானத்தை முன்வைத்த அதிகாரியின் பெயர் , பதவி, அலுவலக முகவரி , தீர்மான தேதி , அதைப்பற்றிய அலுவலக கோப்பின் ஒளி நகல் தருக .
4. மேற்படி இடத்தில் மின்கம்பங்களை நட இறுதி உத்தரவு கொடுத்த அலுவலரின் பெயர் , பதவி , அலுவலக முகவரி தருக .


5,மேற்படி மின்கம்பம் எத்தனை ஆண்டிற்கு ஒரு முறை மாற்றவேண்டும் , மின்கம்பம் பழுதாகி உள்ளது என்று மனுதாரர் எழுத்து பூர்வமாக புகார் அளித்தால் எத்தனை நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்க்காண அரசனை நகல் இருந்தால் அதன் ஒளி நகல் தருக.


6. மேற்படி இடத்தில் மின்கம்பங்களை நடுவதற்கு முன் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளக்கும் அரசு வழிகாட்டுதலின் ஒளிநகல் தருக.


7. மேற்படி இடத்தில் மின் கம்பங்களை நடும்போது நிலத்தின் உடமைதார் மறுப்பு தெரிவித்தால் வாரியம் எடுக்க கூடிய சட்டபூர்வமான நடவடிக்கைகளை எதிர் கொள்ள மின்வாரிய வழிகாட்டடுதலின் ஒளி நகல் தருக.


எனக்கு இணையதள வசதியும் திறமையும் இல்லை ஆகவே கோரிய தகவல்களை அஞ்சலில் 30 தினங்களுக்குள் அனுப்பிடக் கேட்டுக் கொள்கின்றேன். 


கட்டணமாக ரூபாய் 10 க்கான நீதிமன்ற கட்டண வில்லை ஒட்டியுள்ளேன் என்பதையும் கனிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இது தொடர்பாக மேல்முறையீட்டு அலுவலர் பெயர் பதவி முகவரி அளிக்கக் கோருகின்றேன்


இப்படிக்கு


பெயர்
ஒப்பம் தேதி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக