செவ்வாய், 6 ஜனவரி, 2015

RTI power

பேஸ்புக் பக்கத்தில் படித்தது . உங்களது பார்வைக்கு 



நான் இதுவரை மூன்று ஆர்டிஐகளை மட்டுமே செய்துள்ளேன்.
முதலாவதுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் உரிய தகவல் அளித்ததோடு, தொலைபேசியில் தொடர்பு கொண்டும் என்னிடம் பேசினார். நான் எதிர்பார்த்த வேலை உடனடியாக முடித்துக் கொடுக்கப்பட்டது.
இரண்டாவதாக செய்யப்பட்ட மனுவிற்கு வட்டாட்சியர் அலுவலகம் பதிலளிக்கவில்லை. ஆணையம் தகவல் கொடுக்கும்படி சொன்ன பிறகு, வட்டாட்சியரானவர் விஏஓவை எனது வீட்டுக்கு அனுப்பி, அவரது தொலைபேசி மூலமாக என்னை தொடர்பு கொண்டு, என்னை மூளைச்சலவை செய்ய முயன்றார். நான் உடன்படவில்லை. பிறகு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் தக்கதாக இல்லை. எனவே ஆணையத்திடம் வழக்கு செய்தேன். வழக்கு எண் 27004 ஆகி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் எனக்கு விசாரணைக் கடிதம் வரவில்லை. தொடர்ந்து முயன்று கொண்டுள்ளேன். பிறகு பதிலளிக்கப்பட்ட விவரத்தை வாலாகப் பிடித்துக்கொண்டு புதிதாக மூன்றாவதாக ஒரு ஆர்டிஐ போட்டுள்ளேன். அதுவும் நீண்டு கொண்டுள்ளது.
நான்காவதாக பஞ்சாப் நேஷ்னல் பேங்க் மேனேஜரிடம் நேரடியாக ஆர்டிஐ பெட்டிஷனை நீட்டிய போது, அவர் வாங்க மறுத்து எனது கோரிக்கையை மட்டும் நிவர்த்தி செய்தார். ஆனால் பயத்தினால் மறைமுகமாக உள்ளூர் குண்டர்களை வைத்து என்னை கை கால்களை வெட்டி விடுவதாக மிரட்டினார். பிறகு அவசரமாக ட்ரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். அப்போது அங்கிருந்த துணை மேனேஜரானவர் மேனேஜர் ஆனார். ஆனால் நான் ஆர்டிஐயில் கேட்ட கேள்விகளுக்கான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததாலும், நான் மற்றும் தவறு செய்யச் சொல்லும் சமூக விரோதிகளுக்கு இடையில் இருந்துகொண்டு ஈடு கொடுக்க முடியாததாலும் அவரும் ட்ராஸ்பராகிச் சென்றுவிட்டார்.
இதுவெல்லாம் எதனால்? எனது ஆர்டிஐக்கள் பவர்ஃபுல்லாக இருந்ததனாலா இல்லை இல்லாததனாலா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக