புதன், 7 ஜனவரி, 2015

Sample RTI - Police

அனுப்புநர் :
     ம. பாலமுருகன்,
     த/பெ. மருதமுத்து,
     முல்லை நகர்,
     கந்தர்வகோட்டை,
     புதுக்கோட்டை.
      செல்: 9943588477

பெறுநர் :
      பொது தகவல் அலுவலர் அவர்கள்,
      கூடுதல் காவல் கண்காணிப்பாளர்,
      மாவட்ட குற்ற ஆவணக்கூடம்,
      புதுக்கோட்டை மாவட்டம்.
ஐயா,
      பொருள்: தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005 ன்படி எனது சகோதரர் இறந்த வழக்கு தொடர்பாக தகவல் கோரி விண்ணப்பம்.
      எனது சகோதரர் தாமரைசெல்வம் 11.04.2011 அன்று தனது நண்பர் சக்திவேலுடன் நார்த்தாமலை திருவிழாவிற்கு சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்ததாக கீரனூர் காவல் நிலையத்தில் 128/2011 வழக்கு பதியப்பட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரண்டு முறை  மறுவிசாரணைக்கான உத்தரவு பெறப்பட்டது (நகல் இணைக்கப்பட்டுள்ளது). உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு Crl.O.P M.P No.4561/2012 ன்படி கணேஷ் நகர் காவல் ஆய்வாளராக இருந்த தமிழ்மாறன் விசாரணை செய்தார். அவரது விசாரணையில் பல பொய் சாட்சிகளைகொண்டு இதனை விபத்து வழக்காக முடிப்பதற்கு முயற்சி செய்தார். இதையடுத்து கடந்த 08.07.2013 அன்று மாண்புமிகு தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு (2013/737364/JX) புகார் செய்தேன். இதற்கு 20.08.2013 அன்று புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர், முதல்வரின் தனிப்பிரிவிற்கு அனுப்பியுள்ள பதிலில், உடனடியாக வேறு விசாரணை அதிகாரிக்கு மாற்றி தருவதாக உறுதியளித்துள்ளார் (நகல் இணைக்கப்பட்டுள்ளது).
    
01) அதன்படி 20.08.2013 – 31.12.2014 இந்தநாள் வரையில், 498 நாட்கள் ஆகியும் மாண்புமிகு தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு உறுதியளித்தபடி, இவ்வழக்கை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புதிய விசாரணை அதிகாரிக்கு மாற்றி கொடுக்காததன்  காரணம் என்ன? இவ்வழக்கில் அவர் மேற்கொண்ட நடவடிக்கை என்ன?
02) இதே வழக்கு தொடர்பாக கடந்த 10.10.2014 அன்று கீழ்க்காணும் இணைப்புகளுடன், மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்களிடம் நேரில் புகார் அளித்தேன். இப்புகாரின் மீது மத்திய மண்டல காவல்துறை தலைவர் மற்றும் புதுக்கோட்டை மவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கை என்ன?
03) இதே வழக்கு தொடர்பாக கடந்த 10.10.2014 அன்று கீழ்க்காணும் இணைப்புகளுடன், மத்திய மண்டல காவல்துறை துணை தலைவர் அவர்களிடம் நேரில் புகார் அளித்தேன். இப்புகாரின் மீது மத்திய மண்டல காவல்துறை துணை தலைவர் மற்றும் புதுக்கோட்டை மவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கை என்ன?

     மேற்குறிப்பிட்ட வினாக்களுக்குறிய பதிலை தகவலாக அளிக்குமாறு தங்களை மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.



இடம்: கந்தர்வக்கோட்டை                     இப்படிக்கு,

நாள்: 31.12.2014                         தங்கள் உண்மையுள்ள,
                                        
                                         (ம.பாலமுருகன்).
இத்துடன்  இணைக்கப்பட்டுள்ளவை:
1.முதல் தகவல் அறிக்கை நகல்
2.உயர்நீதிமன்ற மதுரை கிளை- உத்தரவு நகல்
3.தமிழக முதல்வரின் – தனிப்புகாரின் நகல்
4. மத்திய மண்டல காவல்துறை தலைவர்- புகார் நகல்

5. மத்திய மண்டல காவல்துறை துணைத்தலைவர்- புகார் நகல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக