புதன், 7 ஜனவரி, 2015

sample rti to RTI

1. மாநில தகவல் ஆணயத்திற்கு விசாரணையின் பொருட்டு வரும் மேல்முறையீட்டாளர்களுக்கு அவர்களின் வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ளதா என்ற விவரம் தரவும்.
2. விசாரணையின் பொழுது மேல்முறையீட்டாளர்கள் மற்றும் பொது தகவல் அலுவலர் அமர்வதற்கு என்னவிதமான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என்ற விவரம் தரவும்.
3. மாநில தகவல் ஆணைய உரிமையியல் நீதிமன்றத்திற்குரிய அதிகார வரம்புடன் செயல்படுவதால் விசாரணையின் போது பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா/ இல்லை என்றால் அதற்குரிய காரணம் சட்டப் பிரிவு 4(d) -ன் படி தரவும்.
4. 2009 மற்றும் அதற்கு பிந்தைய வருடங்களுக்குரிய ஆண்டறிக்கை ஆணையத்தின் இணையதளத்தில் தரவேற்றம் செய்யப்படாதற்கான காரணம் என்ன என்ற தகவல் தரவும்.
5. 2009 மற்றும் அதற்கு பிந்தைய வருடங்களுக்குரிய ஆண்டறிக்கை பெற எங்கு, யாரைத் தொடர்பு கொள்ல வேண்டும் என்ற தகவல் தருக.
6. 2009 மற்றும் அதற்கு பிந்தைய வருடங்களுக்குரிய ஆண்டறிக்கை ஆணையத்தின் இணையதளத்தில் தரவேற்றம் செய்ய கடமைப் பட்டுள்ள அலுவலர் பெயர், பதவி மற்றும் கல்வித் தகுதி ஆகிய விவரம் தரவும்.
7. மேற்படி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ள அலுவலர் பெயர், பதவி மற்றும் கல்வித் தகுதி ஆகிய விவரம் தரவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக