செவ்வாய், 6 ஜனவரி, 2015

போக்குவரத்துக் கழக RTI sample applications

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருச்சி கோட்டத்திற்கான ஆர்டிஐ.
1. ஜெயங்கொண்டம் பணிமனையில் இருந்து, ஜெயங்கொண்டம் முதல் ஆதனக்குறிச்சி வரை தடம் எண் 11 ஆக இயக்கப்படும் நகரப் பேருந்தானது, தேவனூர் வழியாக இயக்கப்படுவது ஏன் நிறுத்தப்பட்டது என்பதைத் தெரிவிக்கவும்.
2. அப்பேருந்து எந்த தேதி முதல், எந்த தேதி வரை தேவனூர் வழியாக இயக்கப்பட்டது என்பதைத் தெரிவிக்கவும்.
3. அப்பேருந்து தேவனூர் வழியாக இயக்கப்படுதல் என்பது, எக்காரணங்களுக்காக துவங்கப்பட்டது என்பதைத் தெரிவிக்கவும்.
4. ஜெயங்கொண்டம் பணிமனையில் இருந்து, ஜெயங்கொண்டம் முதல் ஆண்டிமடம் வரை தடம் எண் 8 ஆக இயக்கப்படும் நகரப் பேருந்தின் புறப்படுதல் மற்றும் சென்றடைதல் கால தினசரி அட்டவணையை, நாள் முழுவதின் அனைத்து ட்ரிப்புகளுக்காகவும் இரு மார்க்கங்களிலும் தரவும்.
5. அப்பேருந்து தேவனூரில் நின்று செல்லும் தினசரி பயண நேரத்தை, நாள் முழுவதின் அனைத்து ட்ரிப்புகளுக்காகவும் இரு மார்க்கங்களிலும் தரவும்.
6. அப்பேருந்து ஏன் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நேரமாகவும், மக்கள் அறிந்துள்ள நேரத்தில் இருந்து 20 நிமிடங்கள் முதல் 5 நிமிடங்கள் வரை முன்னதாகவும் செல்கின்றது என்பதைத் தெரிவிக்கவும்.
7. அப்பேருந்து இயக்கப்படுவது காலத்தோடு மக்களுக்கு சேவை புரியவா அல்லது தான்தோன்றித் தனமாக ஓட்டுநரும், நடத்துனரும் மட்டும் சம்பளத்து கடமைக்காக கண்டபடி இயக்கிக் கொள்ளவா என்பதைத் தெரிவிக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக