rti லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
rti லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 ஜனவரி, 2015

Sample application for FILMS

பெறுநர்: பொதுத் தகவல் அலுவலர், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005,          வணிகவரி மற்றும் பதிவுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9


தகவல் உரிமைச் சட்டம் 2005 இன் படிகீழே கோரப்பட்ட விவரங்களைவழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்விண்ணப்ப கட்டணமாக ரூ.10நீதிமன்ற வில்லை ஒட்டியுள்ளேன்.

  1. 1.   அங்குசம்” என்ற திரைப்படத்திற்கு வரிவிலக்கு கோரி:
1.  அ) தங்கள் அலுவலத்திற்கு விண்ணப்பிக்கப்பட்ட நாள் என்ன ? 1  ஆ) விண்ணப்பிக்கப்பட்ட நாள் முதல், இதுநாள் வரை(to-date) வரை அந்த விண்ணப்பத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நாள் வாரியாகத் தரவும் 1   இ) விண்ணப்பித்த நாள் முதல் இதுநாள் வரை(to-date) மனு குறித்து தங்கள் துறை அதிகாரிகள் எழுதிய அலுவலக குறிப்புகளின் (File noting) நகல் தேவை

  1. திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பதற்கு : 2  அ) 2006-2011 வரை பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகள்(Procedures) குறித்த விவரங்கள் தரவும் 2  ஆ) தற்போது(as of 21-10-2013) பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைகள்(Procedures) குறித்த விவரங்கள் தரவும்

  1. 3.   1-4-2006 முதல் 21-10-2013 வரையான காலகட்டத்தில்:
3 அ) ஆண்டுவாரியாக திரைப்படங்களுக்கு வரிவிலக்கு கொடுக்கப்பட்ட தொகை விவரங்கள் தரவும் ? 
3 ஆ) திரைப்படம் வாரியாக வரிவிலக்கு கொடுக்கப்பட்ட தொகை எவ்வளவு என்ற விவரங்கள் தரவும் ?

  1. மேலே கேட்கப்பட்ட விவரங்களை நேரில் பார்வையிட தகுந்த நாள், நேரம் ஒதுக்கித் தரவும்

                                                                                  இப்படிக்கு,                                                                                         





அங்குசம் - நீங்களும் அனுப்பலாம் RTI

செவ்வாய், 6 ஜனவரி, 2015

Sample RTI Teachers recruitment





போக்குவரத்துக் கழக RTI sample applications

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருச்சி கோட்டத்திற்கான ஆர்டிஐ.
1. ஜெயங்கொண்டம் பணிமனையில் இருந்து, ஜெயங்கொண்டம் முதல் ஆதனக்குறிச்சி வரை தடம் எண் 11 ஆக இயக்கப்படும் நகரப் பேருந்தானது, தேவனூர் வழியாக இயக்கப்படுவது ஏன் நிறுத்தப்பட்டது என்பதைத் தெரிவிக்கவும்.
2. அப்பேருந்து எந்த தேதி முதல், எந்த தேதி வரை தேவனூர் வழியாக இயக்கப்பட்டது என்பதைத் தெரிவிக்கவும்.
3. அப்பேருந்து தேவனூர் வழியாக இயக்கப்படுதல் என்பது, எக்காரணங்களுக்காக துவங்கப்பட்டது என்பதைத் தெரிவிக்கவும்.
4. ஜெயங்கொண்டம் பணிமனையில் இருந்து, ஜெயங்கொண்டம் முதல் ஆண்டிமடம் வரை தடம் எண் 8 ஆக இயக்கப்படும் நகரப் பேருந்தின் புறப்படுதல் மற்றும் சென்றடைதல் கால தினசரி அட்டவணையை, நாள் முழுவதின் அனைத்து ட்ரிப்புகளுக்காகவும் இரு மார்க்கங்களிலும் தரவும்.
5. அப்பேருந்து தேவனூரில் நின்று செல்லும் தினசரி பயண நேரத்தை, நாள் முழுவதின் அனைத்து ட்ரிப்புகளுக்காகவும் இரு மார்க்கங்களிலும் தரவும்.
6. அப்பேருந்து ஏன் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நேரமாகவும், மக்கள் அறிந்துள்ள நேரத்தில் இருந்து 20 நிமிடங்கள் முதல் 5 நிமிடங்கள் வரை முன்னதாகவும் செல்கின்றது என்பதைத் தெரிவிக்கவும்.
7. அப்பேருந்து இயக்கப்படுவது காலத்தோடு மக்களுக்கு சேவை புரியவா அல்லது தான்தோன்றித் தனமாக ஓட்டுநரும், நடத்துனரும் மட்டும் சம்பளத்து கடமைக்காக கண்டபடி இயக்கிக் கொள்ளவா என்பதைத் தெரிவிக்கவும்.

அரசு தகவல்கள் ONLINE பெற





https://rtionline.gov.in/login.php.... இந்த வெப்சைட்டில் சென்று sign up கொடுத்து நமக்கு என்று ஒரு account உருவாக்கி கொண்டு rti மூலம் தகவல்கள் பெறலாம்....மத்திய அரசு தகவல்கள்  ஆங்கிலத்தில்மட்டுமே.

மத்திய அரசு அலுவலகங்களுக்கு மட்டுமான ஆர்டிஐக்களை தற்போது ஆன்லைனில் செய்யலாம். ரிஜிஸ்டர் போஸ்ட் செலவு மிச்சம். விண்ணப்பம், முதல் மேல்முறையீடு ஆகியவற்றை செய்யலாம். நீங்கள் துறை மாற்றி அனுப்பி இருந்தாலும் அது சரியான துறைக்கு அனுப்பப்பட்டு உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். பணம் ஆன்லைனில் செலுத்திக் கொள்ளலாம். மேலும் பணம் செலுத்த வேண்டி இருத்தல், நிராகரிப்பு உள்ளிட்ட அனைத்து ஸ்டேட்டசுகளையும் லிங்க் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த எளிய முறையை அனைவரும் பயன்படுத்தலாம்.